Thursday, February 25, 2021

When things fall apart by Pema Chödrön (ஒருவேளை வீழ்ச்சியடையும் போது)

நம் வாழ்வில் நாம் சமாலிக்கவே முடியாத ஒருசில விஷயங்கள் இருக்கும். அதாவது நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் இறந்து போனாலோ அல்லது நமக்கு மிகவும் பிடித்த விஷயங்கள் நம்மை விட்டு போனாலோ அல்லது நம்முடைய வியாபாரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சி அடைந்தாலோ அல்லது இத்தனைநாள் நாம் சேகரித்துவைத்திருந்த ஒரு பொருள் காணாமல் போனாலோ அல்லது நனக்கு பிடித்த நபர் நம்மிடம் பேசவில்லை என்றாலோ; அப்பொழுது இதுபோன்ற சூழ்நிலையை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையே என்ற உணர்ச்சியை நமக்கு கொடுக்கும். இந்த புத்தகத்தில் பேமா சொட்ரோன் (Pema Chödrön) என்பவர் என்ன கூறுகிறார் என்று பார்த்தல் - இதுதான் இயற்கை. மழை பெய்கிறது, வெயில் அடிக்கிறது என்பதுபோல இதுவும் இயற்கைதான் என கூறுகிறார். 

உங்களுக்கு பிடித்த விஷயம் உங்களிடம் இல்லாமல் போகலாம் அல்லது உங்களுக்கு பிடித்த நபர் உங்களின் வாழ்க்கையில் இல்லாமல் போகலாம். தற்போது நிகழ்காலத்தில் உங்களுடன் இருக்கும் நபர்களுடன் சந்தோசமாக மகிழுங்கள். நீங்கள் என்னவாகவேண்டும் என ஆசை படுகிறீர்களோ தற்போது நிகழ்காலத்தில் உங்களிடம் உள்ளதைவைத்துதான் ஆகமுடியும். இந்த தருணத்தில் உங்களின் வாழ்க்கை உங்களை என்னதான் வச்சி செஞ்சாலும் சரி என்னதான் பண்ணுனாலும் சரி இது எதுவுமே முடியப்போவதில்லை. இந்த கஷ்டம் முடிந்தாலும் கண்டிப்பாக மற்றொரு கஷ்டம் வரத்தான் போகிறது. அதாவது இந்த ஒரு கஷ்டம் முடிந்த பிறகு சந்தோஷம் என்று எதிர்பார்தோமனால் கண்டிப்பாக முடியவே முடியாது. இதன்மூழியமாக பேமா சொட்ரோன் (Pema Chödrön) என்ன சொல்ல வருகிறார் என்று பார்த்தோமானால், நாம் நினைக்கும் வரை (as long as we think), இந்த கஷ்டம் முடிந்த பின் சந்தோஷமாக இருந்துவிடுவேன், அல்லது எனக்கு இது கிடைத்துவிட்டது, இவையாவும் நிரந்தரமாக இருந்துவிட்டால் சந்தோஷமாக இருந்துவிடுவேன், ஆ ஹா இப்படி ஒரு நபன் என் வாழ்நாள் முழுதும் இருந்துவிட்டால் என் வாழ்வு முழுமையடைந்துவிடுமே என்கின்ற இணைப்பு (attachment) வைத்திருக்கும்வரை கண்டிப்பாக வலிகளில்தான் சென்று முடியும் என்கின்றார் இப்புத்தக எழுத்தாளர்.

இந்த நபர் இந்த நிமிடம் நம்முடன் மிகவும் நல்லவராக இருக்கிறாரா! நமக்கு மிகவும் ஏற்றவாறு இருக்கிறாரா! ஆனால் இல்லாமலும் போகலாம். இப்பொழுது இந்த புத்தகம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது, இந்த பொருள் என்னை மகிழ்ச்சியாக வைத்துள்ளது அல்லது இந்த வீடு என்னை செம்மையாக வைத்துள்ளது. இருப்பினும் இது எதுவுமே எனக்கு இல்லாமலும் போகலாம். எல்லாமே வரும் போகும். இதையே பேமா சொட்ரோன் (Pema Chödrön) எப்படி கூறுகிறார் என்றாள், நாம் சிறு குழந்தைகளாக இருக்கும்பொழுது மணல் வீடு கட்டி விலையாடுவோம் ஞாபகம் இருக்கிறதா? அவ்வீட்டை கட்டி முடிக்கும்வரை நம்முடைய முழு முயற்சியையும் செலுத்துவோம். ஆனால் நமக்கு தெரியும் கடல்நீர் வந்து எப்படியும் அடித்து மணல்வீட்டை கொண்டு போய்விடும் என்று. அதுபோல்தான் வாழ்க்கையில் நாம் எது செய்வதாக இருந்தாலும் அதுதான் முக்கியம் என்கின்ற அளவுக்கு 100% செறிவுடன் (concentration) செய்யுங்கள், 100% ஈடுபாடுடன் செய்யுங்கள், ஆனால் அதே நேரத்தில் அது எதுவுமே நாளை இல்லாமலும் போகலாம் என்பதையும் மனதினுல் வைத்துக்கொள்ளுங்கள் என கூறுகிறார் எழுத்தாளர்.


நிறைய மனிதர்கள் அதுவும் முக்கியமாக என்னைவிட மூத்தவர்கள் வாழ்வில் பாதுகாப்பு (security) என்று ஒன்று வேண்டாமா? எத்தனை நாள் தனியாக இருந்துவிட முடியும் என கேட்கிறார்கள். பேமா சொட்ரோன் (Pema Chödrön) தன்னுடைய புத்தகத்தில் என்ன கூறினார் என்றாள், பாதுகாப்பு என ஒன்றை எப்பொழுது நாம் எதிர்பார்க்கிறோமோ அதுமட்டுமே வாழ்க்கை அல்ல என்கிறார். ஒரு மனிதராக 100% உயிருடன் இருக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு முறையும் கூட்டை விட்டு வெளியில் இருப்பதாக நினைத்துக்கொள்ள வேண்டும் என்கின்றார். எந்த மனிதனின் நிலமும் இல்லை (no man's land), எனக்கன ஒரு நிலமே இல்லை என ஒரு நிலை வருமல்லவா, அதுதான் நிரந்தரமானது என்கின்றார் எழுத்தாளர். நமக்காக யாருமே இருக்க போவதில்லை என்பதுதான் உண்மையானது (fact). 

கண்டிப்பாக தனிமை (solitude) என்பது நம்முள் இருக்கத்தான் போகின்றது  அல்லது அழகான தனிமை (beautiful loneliness) இருக்கத்தான் போகின்றது என்கின்றார். இறுதியில் நம்முடன் நாம் மட்டும்தான் இருக்க போகிறோம் என்பதை மனதினுள் ஒரு பக்கம் வைத்திருக்கக் கூறுகிறார். மற்றவர்களுக்கு முடிந்தவரை எவ்வளவு நேர்மறை தர முடியுமோ, எவ்வளவு நல்ல விஷயங்கள் பகிர்ந்துகொள்ள முடியுமோ தாராலமாக பகிரலாம். ஆனால் அதற்காக அந்த நபர் நம்முடன் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது  தவறு. அதேபோல், நாம் நம்மிடம் உள்ள எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொள்ள முடியவில்லை என்றாலும் மிகுந்த இணைப்புடன் இல்லாமலும் அவர்களை தவராக கணிக்காமலும் (judge) அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கின்றார் எழுத்தாளர். உங்களுடைய குறை நிறைகளை, உங்களுடைய உடம்பை, உங்களுடைய மனதை, உங்களுடைய பண்புகளை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கின்றார். நீங்கள் உங்களையே அதிகமாக நேசிக்க நேசிக்க கண்டிப்பாக உங்களின் பண்பையும் உங்களின் உடலையும் உங்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றும் என்கின்றார் பேமா சொட்ரோன் (Pema Chödrön).  

மேலும் வாழ்கையில் ஏதாவது ஒரு பிடிப்பு, அதிகமாக கஷ்டபடும்போது, என்ன பன்னுவது என்று தெரியாத போது, நம்மை மீரி பல விஷயங்கள் நடக்கும்போது ஒரு பிடிப்பு (grip) கிடைத்துவிடாதா? யாருடையவாவது ஒரு கை கிடைத்துவிடாதா, அல்லது ஏதாவது இரு நேர்மறை விஷயம் நடந்து விடக்கூடாதா? என ஒரு பிடிப்பை தேடுகிறோம் அல்லவா, அதைத்தான் தீயிசம் (Theism) என்கிறார். ஏதோ ஒரு விஷயம் நடக்கடும்! மேலே இருப்பவன் பார்த்துக்கொல்வான் என ஒரு பிடிப்பு தேடுவதே அதன் பொருள். ஆனால், பேமா சொட்ரோன் (Pema Chödrön) தீயிசம் அற்றது (Non Theism) பற்றி என்ன கூறுகிறார் என்றால், கண்டிப்பாக எதுவும் நிறந்தரம் இல்லை, மாற்றங்கள் இருந்துகொண்டேதான் இருக்க போகிறது, துன்பத்திலிருந்து நாம் தப்பிக்கவே முடியாது. சந்தோஷமும் நிரந்தரம் இல்லை. இப்படிப்பட்ட ஒரு ஒட்டுமொத்த விஷயத்தையும் நம்பிக்கையுடன் ஏற்றுகொல்வதுதான் முக்கியம் என்கிறார் பேமா சொட்ரோன் (Pema Chödrön).  









No comments:

Post a Comment

When things fall apart by Pema Chödrön (ஒருவேளை வீழ்ச்சியடையும் போது)

நம் வாழ்வில் நாம் சமாலிக்கவே முடியாத ஒருசில விஷயங்கள் இருக்கும். அதாவது நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் இறந்து போனாலோ அல்லது நமக்கு மிகவும் ...